GLOSSARY

Passage of a Bill

In order to be passed by Parliament, a Bill has to go through a number of stages:

(a) First Reading: This is a formal introduction stage with no debate. The Bill is introduced by the Member in charge.19 He would read out the long title of the Bill. The Clerk at the Table then reads out its short title. The Bill is then gazetted, after which seven days must lapse before the Second Reading of the Bill can be taken. (See also Bill and Titles of a Bill);

(b) Second Reading: The principles of a Bill are debated at its Second Reading. A vote is taken as to whether the Bill should be read a second time. If agreed to, the short title is again read out by the Clerk and the Bill moves on to the Committee stage. If the Second Reading of the Bill is not agreed to, the Bill is considered to be negatived. (See also “on this day six months”);

(c) Committee Stage: The details of a Bill are scrutinised by either the Committee of the whole Parliament or by a Select Committee. Here, it is considered in detail, clause by clause. A Select Committee may invite representations or views from the public. Any amendment to the Bill or introduction of new clauses will be considered and voted on at this stage. The final form of the Bill is presented to Parliament in the report stage. (See also Committal of Bill);

(d) Report Stage: The Bill is reported to the House. If reported from the Committee of the whole Parliament, the Minister in charge of the Bill states that it has been considered in Committee and agreed to with, or without, amendments. If the Bill was referred to a Select Committee, the Committee will table its report to Parliament. The report will contain the Select Committee’s recommendations for amendments to the Bill, if any. The Bill will proceed for its Third Reading, unless recommitted to a Committee of the whole Parliament for further amendments. (See also Recommittal of a Bill);

(e) Third Reading: The procedure is the same as for the Second Reading, though debate at this stage is more limited, it being confined to the actual contents of the Bill. Amendments for the correction of errors or oversights may be proposed, but amendments of a material character cannot be introduced. A vote is then taken for the Third Reading of the Bill. If agreed to, the short title of the Bill is read a third time by the Clerk, and the Bill is deemed to have been passed by the House. If the Third Reading of the Bill is not agreed to, the Bill is considered to have been negatived;

(f) Consideration by the Presidential Council for Minority Rights: Most Bills are then referred to the Presidential Council for Minority Rights, which determines if the provisions of the Bill contain any differentiating measures affecting any racial or religious community in Singapore. If the Presidential Council gives an adverse report, Parliament can either amend the affected provisions (after which the amended Bill should be referred back to the Presidential Council) or pass a resolution that the Bill be presented to the President for his assent despite the adverse report. Such a resolution must be supported by not less than two-thirds of all Members of Parliament. (See also Presidential Council for Minority Right);

(g) President’s Assent: The Bill is then sent to the President for his assent. Once it has received the President’s assent, it becomes an Act of Parliament. The Act is then published in the Government Gazette. Arts 77 and 78 of the CRS and S.O. 83.

19In the case of a Government Bill, it would be the Minister responsible for the Bill.

Prosedur Meluluskan Rang Undang-Undang

Untuk diluluskan oleh Parlimen, Rang Undang-Undang harus melalui beberapa peringkat (Lihat Lampiran 1):

(a) Bacaan Pertama: Peringkat pembentangan rasmi, tanpa perbahasan. Anggota yang bertanggungjawab membentangkan Rang Undang-Undang dengan membacakan tajuk panjangnya.19 Setiausaha di Meja Setiausaha kemudian membacakan tajuk pendeknya. Rang itu seterusnya diwartakan dan selepas sekurang-kurangnya tujuh hari jelas, Bacaan Kedua Rang itu boleh dilaksanakan.
(Lihat juga Rang Undang-Undang dan Tajuk Rang Undang-Undang);

(b) Bacaan Kedua: Prinsip Rang Undang-Undang itu dibahaskan di peringkat Bacaan Kedua. Pengundian dijalankan untuk menentukan sama ada Rang itu patut dibaca buat kali kedua. Jika disetujui, tajuk pendeknya dibacakan sekali lagi oleh Setiausaha dan Rang Undang-Undang itu beralih ke peringkat Jawatankuasa. Jika Bacaan Kedua tidak disetujui, Rang Undang-Undang dianggap ditolak.
(Lihat juga “enam bulan dari hari ini”);

(c) Peringkat Jawatankuasa: Perincian Rang Undang-Undang diteliti oleh sama ada Jawatankuasa Seluruh Parlimen atau Jawatankuasa Pilihan. Di peringkat ini, Rang dipertimbangkan secara terperinci, fasal demi fasal. Jawatankuasa Pilihan boleh mengundang representasi atau pendapat orang ramai. Apa-apa pindaan kepada Rang Undang-Undang atau pengenalan fasal baru akan dipertimbangkan dan diputuskan dengan undi pada peringkat ini. Bentuk terakhir Rang UndangUndang akan dikemukakan kepada Parlimen di peringkat laporan.
(Lihat juga Penyerahan Rang Undang-Undang);

(d) Peringkat Laporan: Rang Undang-Undang dilaporkan kepada Dewan. Jika dilaporkan daripada Jawatankuasa Seluruh Parlimen, Menteri yang bertanggungjawab bagi Rang itu menyatakan bahawa Rang telah dipertimbangkan dalam Jawatankuasa dan disetujui dengan atau tanpa pindaan. Jika Rang Undang-Undang telah dirujukkan kepada Jawatankuasa Pilihan, Jawatankuasa membentangkan laporannya kepada Parlimen. Laporan itu mengandungi saranan Jawatankuasa Pilihan bagi pindaan pada Rang Undang-Undang, jika ada. Seterusnya, Rang beralih ke peringkat Bacaan Ketiga, kecuali diserahkan semula kepada Jawatankuasa Seluruh Parlimen bagi pindaanselanjutnya.
(Lihat juga Penyerahan Semula Rang Undang-Undang);

(e) Bacaan Ketiga: Prosedurnya serupa dengan Bacaan Kedua, cuma perbahasan di peringkat ini lebih terbatas, iaitu tentang kandungan sebenar Rang Undang-Undang itu sahaja. Pindaan boleh diusulkan bagi membetulkan kesilapan atau sesuatu yang tertinggal, tetapi pindaan yang bersifat material tidak boleh dibuat. Pengundian dijalankan bagi Bacaan Ketiga Rang itu. Jika disetujui, Rang Undang-Undang dibacakan tajuk pendeknya buat kali ketiga oleh Setiausaha, lalu dianggap diluluskan oleh Dewan.
Jika Bacaan Ketiga tidak disetujui, Rang Undang-Undang dianggap ditolak.

(f) Pertimbangan oleh Majlis Presiden bagi Hak Kaum Minoriti: Kebanyakan Rang Undang-Undang dirujukkan kepada Majlis Presiden bagi Hak Kaum Minoriti, yang menentukan sama ada peruntukan Rang Undang-Undang itu mengandungi apa-apa langkah pembezaan yang menjejas mana-mana golongan kaum atau agama di Singapura. Jika Majlis Presiden memberikan laporan negatif, Parlimen boleh meminda peruntukan yang terjejas (selepas itu, Rang Undang-Undang yang sudah dipinda harus dirujukkan kembali kepada Majlis Presiden) atau meluluskan ketetapan bahawa Rang Undang-Undang itu dikemukakan kepada Presiden untuk persetujuan beliau walaupun ada laporan negatif. Ketetapan itu harus disokong oleh tidak kurang daripada dua pertiga bilangan semua Anggota Parlimen.
(Lihat juga Majlis Presiden bagi Hak Kaum Minoriti)

(g) Persetujuan Presiden: Rang Undang-Undang dikemukakan kepada Presiden untuk persetujuan beliau. Setelah menerima persetujuan Presiden, Rang Undang-Undang menjadi Akta Parlimen. Akta itu kemudian diterbitkan dalam Warta Pemerintah.
(Perkara 77 dan 78 Perlembagaan Singapura dan Peraturan Tetap 83)

19Bagi Rang Undang-Undang Pemerintah, beliau adalah Menteri yang bertanggungjawab atas Rang tersebut.

通过法案

国会通过法案之前,必须经过几个阶段。

(a)一读:这是正式推出阶段,无需辩论。法案由负责议员提出,19  首先该议员会念出法案的全名。国会秘书长接着念出法案的短题目。之后,法案均会在政府宪报刊登。必须过最少七天后方进行二读。 (也见法案及法案名称)

(b)二读:议员针对法案的基本原则展开辩论。之后,进行投票表决法案是否进行二读。如果法案获得通过,国会秘书长跟着再念一次法案的短题目,然后国会会马上转入委员会阶段。如果法案二读不获得通过,意味着法案遭到否决。 (也见“六个月后”)

(c)委员会阶段:国会委员会或特选委员会将详细审查法案的细节。委员会将仔细地审查每一个字句或条款。特选委员会将听取公众对于有关法案的意见和建议,然后向国会提呈报告。在这个阶段,委员会将对法案的任何修正或新条款进行投票表决。最后,法案审议后将提交国会作报告。 (也见法案提交委员会)

(d)报告阶段:法案提交国会作报告。如果是在委员会阶段,负责该法案的部长将声明表示,法案已经过委员会阶段审查获得通过或经修正后通过。如果法案提交特选委员会,该特选委员会必须向国会提呈报告。报告将包括特选委员会提出的修正建议。除非法案需要重新提呈给由全体国会组成的委员会做进一步修正,否则法案将进入三读。(也见法案重新提交委员会审查)

(e)三读:过程与二读相同,只是在这一阶段辩论更加有限,仅限于法案内容本身。可以更改一些小错误,但不可以进行实质性的改动。之后会进行表决。通过后,国会秘书长会第三次念出法案的短题目,法案即被认为已在国会获得通过。如三读时未获通过,法案则被否决。

(f)少数民族权益总统理事会审查:大部分法案此时会提交给少数民族权益总统理事会审查法案是否有区别性做法,导致新加坡的某一宗教或种族族群受到影响。如果理事会认为法案确有这样的条款,国会或可修改相关条款 (之后须再次提交给理事会审查),或可通过决议,在理事会提出异议的情况下仍提交总统批准。此决议必须获得至少三分之二议员的支持。(也见少数民族权益总统理事会)

(g)总统同意:法案接着呈交总统同意。总统一旦同意,法案就成为法令。法令的有效日期将公布在宪报上。

新加坡共和国宪法第77及78条款。 议事常规83。

19 如果是政府法案,由负责该法案的部长提出。

மசோதா சட்டமாகும் முறை

நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட வேண்டும் என்றால் ஒரு மசோதா பல்வேறு கட்டங்களைக் கடக்க வேண்டும்.

(அ) முதல் வாசிப்பு: மசோதா மீது விவாதம் இல்லாத அறிமுகக் கட்டம் இது. பொறுப்பேற்கும் அமைச்சரால் மசோதா அறிமுகம் செய்யப்படும்.19 மசோதாவின் நீண்ட தலைப்பை அவர் வாசிப்பார். மேசையில் இருக்கும் அலுவலர் குறுகிய தலைப்பை வாசிப்பார். அதன் பின்னர் மாசோதா அரசாங்க இதழில் வெளியிடப்படும். மசோதாவின் இரண்டாம் வாசிப்புக்கு எடுத்துக்கொள்வதற்கு முன்னர் ஏழு நாட்கள் கழியவேண்டும்.

(மசோதா மற்றும் மசோதாவின் தலைப்பு மசோதாவின் தலைப்புகள் ஆகியவற்றையும் பார்க்கவும்)

19 அரசாங்க மசோதாவைப் பொறுத்தவரை, மசோதாவுக்கு அமைச்சர் பொறுப்பாக இருப்பார்.

(ஆ) இரண்டாம் வாசிப்பு: மசோதாவின் இரண்டாம் வாசிப்பில் கொள்கைகள், நோக்கங்கள் விவாதிக்கப்படும். இரண்டாம் முறை வாசிக்கப்பட வேண்டுமா என வாக்களிப்பு எடுக்கப்படும். அவ்வாறு ஒப்புக்கொள்ளப்பட்டால், அலுவலர் மசோதாவின் குறுகிய தலைப்பை மீண்டும் வாசிப்பார். மசோதா குழு நிலைக்கு முன்னேறும். இரண்டாம் வாசிப்புக்கு ஒப்புக்கொள்ளப்படாவிட்டால், மறுத்துத் தள்ளப்பட்டதாகக் கருதப்படும்.

(“இன்றிலிருந்து ஆறு மாதங்கள்” என்பதையும் பார்க்கவும்)

(இ) குழு நிலை: மசோவின் முழு விவரங்கள் அனைத்தும் மன்றத்தின் முழு நிலை குழுவால் அல்லது பொறுக்குக் குழு ஒன்றால் கூர்ந்தாராயப்படும். இங்கு ஒவ்வொரு ஷரத்தாக மாசோதா பரிசீலிக்கப்படும். பொறுக்குக் குழு ஒன்று பொதுமக்களிடமிருந்து பிரதிநிதித்துவம் அல்லது கருத்துக்களை வரவேற்கும். மசோதாவில் செய்யப்படும் எத்தகைய திருத்தமும் அல்லது புதிதாக அறிமுகம் செய்யப்படும் ஷரத்துக்களும் இக்கட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு

வாக்களிக்கப்படும். மசோதாவின் இறுதி வடிவம் அறிவித்தல் கட்டத்தில் மன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

(மசோதாவின் குழு நிலையையும் பார்க்கவும்)

(உ) அறிவிப்புக் கட்டம்: மசோதா மன்றத்தில் முறையாக அறிவிக்கப்படும். மன்றத்தின் முழு நிலை குழுவிலிருந்து அறிவிக்கப்பட்டால், மசோதாவிற்குப் பொறுப்பேற்கும் அமைச்சர், மசோதா குழுவில் பரிசீலிக்கப்பட்டதுடன், திருத்தத்துடன் அல்லது திருத்தமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிப்பார். மசோதா ஒரு பொறுக்குக் குழுவிற்கு அனுப்பப்பட்டிருந்தால், அக்குழு தன் அறிக்கையை மன்றத்தில் தாக்கல் செய்யும். மசோதாவில் திருத்தம், ஏதேனும் இருந்தால், செய்வதற்கான பொறுக்குக் குழுவின் பரிந்துரைகளை அந்த அறிக்கை உள்ளடக்கியிருக்கும். மேலும் திருத்தங்கள் செய்வதற்காக மன்றத்தின் முழு நிலை குழுவிற்கு மீண்டும் அனுப்பப்படாவிட்டால், மசோதா அதன் மூன்றாவது வாசிப்புக்குச் செல்லும்.

(குழு நிலையிலிருந்து மசோதா முழு மன்றத்திற்கு மீண்டும் அனுப்பப்படுதலையும் பார்க்கவும்)

(ஊ) மூன்றாம் வாசிப்பு: இரண்டாம் வாசிப்பைப் போன்றே இதன் நடைமுறையும் இருக்கும். ஆனால் இந்தக் கட்டத்தில் உள்ள விவாதம் மசோதாவின் உள்ளடக்கத்தைப் பற்றி வரையறுக்கப்பட்டிருக்கும். தவறுகள் அல்லது கவனக்குறைவுகள் திருத்திக்கொள்ளபபடுவதற்கான திருத்தங்கள் முன் மொழியப்படலாம், ஆனால் முக்கிய மாற்றங்களைக் கொண்டு வரும் திருத்தங்கள் அறிமுகம் செய்யப்பட முடியாது. அதன் பின்னர், மசோதாவின் மூன்றாம் வாசிப்புக்கான வாக்கு எடுக்கப்படும். அவ்வாறு செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டால், மசோதாவின் குறுகிய தலைப்பு மூன்றாம் முறையாக அலுவலரால் வாசிக்கப்படுவதுடன், மசோதா மன்றத்தால் ஏற்றுக்கொண்டு நிறைவேற்றப்பட்டதாகக் கருதப்படும். மசோதா மூன்றாம் வாசிப்புக்கு ஒப்புக்கொள்ளப்படாவிட்டால், மறுத்துத் தள்ளப்பட்டதாகக் கருதப்படும்.

(எ) சிறுபான்மையினர் உரிமைக்கான அதிபர் மன்றத்தால் பரிசீலிக்கப்படுதல்: பெரும்பாலான மசோதாக்கள் சிறுபான்மையினர் உரிமைக்கான அதிபர் மன்றத்திற்கு பின்னர் அனுப்பப்படும். சிங்கப்பூரில் உள்ள எந்த இன அல்லது சமயம் சார்ந்த சமூகத்தைப் பாதிக்கக்கூடிய, பாகுபடுத்தும் அம்சங்கள் மசோதாவின் ஷரத்துக்களில் உள்ளதா என மன்றம் நிர்ணயிக்கும். அதிபர் மன்றம் பாதகமான அறிக்கையைக் கொடுத்தால், பாதிப்பை ஏற்படுத்தும் ஷரத்தை நாடாளுமன்றம் திருத்தலாம் (அதன்பிறகு திருத்தப்பட்ட மசோதா மீண்டும் அதிபர் மன்றத்திற்கு அனுப்பப்பட வேண்டும்) அல்லது பாதகமான அறிக்கை கொடுக்கப்பட்டிருந்தாலும் அதிபரின் ஒப்புதலுக்காக அந்த மசோதா அனுப்பிவைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றலாம். அத்தகைய தீர்மானம் எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் குறைந்தது மூன்றில் இரண்டு பிரிவினரால் ஆதரவளிக்கப் பட்டிருக்கவேண்டும்.

(சிறுபான்மையினர் உரிமைகளுக்கான அதிபர் மன்றத்தையும் பார்க்கவும்)

(ஏ) அதிபரின் ஒப்புதல்: அதிபரின் ஒப்புதலுக்காகப் பின்னர் மசோதா அனுப்பி வைக்கப்படும். அதிபரின் ஒப்புதலைப் பெற்ற பின்னர், அது நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டமாக மாறும். சட்டம் பின்னர் அரசாங்க இதழில் வெளியிடப்படும்.

சிங்கப்பூர்க் குடியரசு அரசியல் அமைப்புச் சட்ட பிரிவு 77 மற்றும் 78 நிலையான ஆணை 83.